தோல்வியின் உச்சத்தில் போய்விட்டார் எடப்பாடி பழனிச்சாமி அதனால் விரக்தியில் பேசுகிறார் – முதல்வர் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டையில் பேட்டி!

12

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேட்டி

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இலுப்பூரில் நடைப்பயிற்சி மேற்கொண்டு அந்த தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.கே. செல்லப்பாண்டியனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின்

தோல்வியின் உச்சத்தில் போய்விட்டார் எடப்பாடி பழனிச்சாமி அதனால் விரக்தியில் நிதி மேலாண்மையை கையாளத் தெரியவில்லை என்று பேசி வருகிறார். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை,200 தொகுதியில் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்திருந்தோம் தற்போதுள்ள மக்கள் வரவேற்பையும் கூட்டத்தையும் பார்த்தால் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்

எத்தனை பேர் வந்தாலும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை யாராலும் வெல்ல முடியாது. தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை மாற்றி உள்ளனர் இது போன்று என்ன வேணாலும் பண்ணட்டும். இதற்கு மேலும் பண்ணுவார்கள் அதை பத்தி நாங்கள் கவலைப்படவில்லை

தமிழ்நாட்டில் இருக்கும் அதிமுக டெல்லியில் அடமானம் வைத்து விட்டனர் குத்தகைக்கு விட்டு விட்டனர் அடிமையாகி விட்டனர். அதனால் அவர்களை டெல்லி தான் ஆட்சி நடத்துகிறது. அதிமுக என்ற திராவிட கட்சி இப்படி போனது வெட்கப்படுகிறோம் வேதனைப்படுகிறோம்

நடிகர் உள்ளிட்ட யார் வந்தாலும் நாங்கள் கவலைப்படவில்லை நாங்கள் எங்கள் வேலையை பார்க்கிறோம், நடிகர் பின்னாடி சென்று விபத்துக்கள் நேரிடுவதை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் பின்னாடி செல்லும் இளைஞர்கள் விரைவில் திருந்துவார்கள்….. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேட்டி

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களையும் ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள நேற்று இரவு புதுக்கோட்டைக்கு வருகை தந்தார். தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டைக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் புதுக்கோட்டை அடுத்த சிவப்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் ஓய்வெடுத்தார். பின்னர் இன்று காலையில் புதுக்கோட்டை மாநகராட்சி பகுதிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் நடை பயிற்சி மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் நான்காவது முறையாக போட்டியிடும் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இலுப்பூரில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நடைபெற்று மேற்கொண்டார். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து கைகள் கொடுத்து செல்பியும் எடுத்துக்கொண்டு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். பின்னர் அப்பகுதியில் உள்ள வர்த்தக வணிக நிறுவனங்களிலும் தேநீர் கடை பெட்டிக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளிலும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு விராலிமலை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.கே செல்ல பாண்டியனுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். அப்போது அப்பகுதியில் வந்த தனியார் பேருந்திலும் ஏறி வாக்கு சேகரித்த தமிழ்நாடு முதலமைச்சர் வழியாகச் சென்ற அரசு பேருந்தில் பயணித்த மக்களுக்கு கைகளை கொடுத்து வேட்பாளர் செல்லப்பாண்டி எனக்கு ஆதரவு கேட்டார். பின்னர் இலுப்பூரில் உள்ள தேனீர் கடையில் தமிழ்நாடு முதலமைச்சர் தேனீர் அருந்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின்:

வெற்றி வாய்ப்பு அமோகமாகவும் சிறப்பாகவும் இருக்கிறது.

தோல்வியின் உச்சத்தில் போய்விட்டார் எடப்பாடி பழனிச்சாமி அதனால் விரக்தியில் நிதி மேலாண்மையை கையாளத் தெரியவில்லை என்று பேசி வருகிறார். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை

200 தொகுதியில் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்திருந்தோம் தற்போதுள்ள மக்கள் வரவேற்பையும் கூட்டத்தையும் பார்த்தால் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம், எத்தனை பேர் வந்தாலும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை யாராலும் வெல்ல முடியாது. தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை மாற்றி உள்ளனர் இது போன்று என்ன வேணாலும் பண்ணட்டும். இதற்கு மேலும் பண்ணுவார்கள் அதை பத்தி நாங்கள் கவலைப்படவில்லை.

தமிழ்நாட்டில் இருக்கும் அதிமுக டெல்லியில் அடமானம் வைத்து விட்டனர் குத்தகைக்கு விட்டு விட்டனர் அடிமையாகி விட்டனர். அதனால் அவர்களை டெல்லி தான் ஆட்சி நடத்துகிறது. அதிமுக என்ற திராவிட கட்சி இப்படி போனது வெட்கப்படுகிறோம் வேதனைப்படுகிறோம்.

நடிகர் உள்ளிட்ட யார் வந்தாலும் நாங்கள் கவலைப்படவில்லை நாங்கள் எங்கள் வேலையை பார்க்கிறோம்…..

நடிகர் பின்னாடி சென்று விபத்துக்கள் நேரிடுவதை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் பின்னாடி செல்லும் இளைஞர்கள் விரைவில் திருந்துவார்கள் என்று தெரிவித்தார்.