தென் தமிழகத்தில் ஆரம்பித்த 2026 சட்டமன்ற தேர்தல் ஜுரம்!
வாக்காளர்கள் கவர பொங்கல் பரிசுகள் யுக்தி!

2026ஆம் ஆண்டிற்கான பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி கொண்டாட்டப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2026ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டது.
பொங்கல் பரிசுத் தொகுப்பகா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு மற்றும் இலவச வேட்டி சேலை வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு ரொக்கமாக ரூ.3,000 வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 8ஆம் தேதி தொடங்கி வைத்தார்…
இதற்கிடையே தங்கள் மாவட்டங்களில் ஆளும் கட்சி, மற்றும் எதிர் கட்சியினர், மாற்று கட்சியினர் தங்கள் தொகுதி மக்களுக்கு பொங்கல் பரிசு தங்கள் வசதிக்கு ஏற்ப ரொக்கமாகவும், பொருட்களாகவும் வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.. .
நம்ம கண்களுக்கு கிடைத்த புகைப்படங்கள் சில!
தனது சொந்த செலவில்
திருச்சியில் தொகுதி மக்களுக்கு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே. என் நேரு
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதியில் தொகுதி மக்களுக்கு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்
ரகுபதி..
விராலிமலையில் அஇஅதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர் தொகுதிகளில் தொகுதி மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறார்கள்..
தொகுதிக்கு தொகுதி பல கோடி பணம் வேட்பாளர்கள் செலவுகள்..
மக்கள் பணம் மக்களுக்கே பொருட்களாக வந்து சேர்ந்தாலும்
தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான பிறகு தேர்தல் ஆணையம் உற்றுக் கூர்ந்து கவனித்து வேட்பாளர் செலவின கணக்கில் வரவு வைக்கப்படுமா இந்த பரிசு தொகுப்பு செலவினங்கள் என
மாற்று கட்சியினர், சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்..















