திருத்தணி அருகே, கஞ்சா போதையில் நான்கு மாணவர்கள் வட மாநில இளைஞரை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

5

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே, கஞ்சா போதையில் நான்கு மாணவர்கள் வட மாநில இளைஞரை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கஞ்சா போதையில், கையில் பயங்கர ஆயுதங்களுடன் ரீல்ஸ் எடுத்த 4 இளைஞர்கள், வட மாநில இளைஞரை சூரஜை கத்தியால் வெட்டுவது போல் வீடியோ எடுத்து போதையில் இன்ஸ்டாகிராம் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

அதன் பிறகு திருத்தணி ரயில் நிலையத்தில் அழைத்து வந்து அந்த வட மாநில இளைஞரை ரயில்வே குடியிருப்பு பகுதியில் கடுமையாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருத்தணி போலீசார், படுகாயங்களுடன் இருந்த வடமாநில இளைஞரை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் உதவியுடன் அனுப்பி வைத்தனர். வடமாநில இளைஞரை வெட்டியவர் யார் என்று திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கினர்.

இதையடுத்து, கஞ்சா போதையில் கத்தியில் வட மாநில இளைஞரை வெட்டிய இந்த நான்கு மாணவர்களை திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்