Site icon News now Tamilnadu

திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி:

நம்பிக்கை வைத்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி – முதல்வர்.

வாழ்த்து தெரிவிக்க வந்த அதிகாரிகளிடம் கொரோனா தடுப்பு குறித்தே விவாதித்தேன் – மு.க.ஸ்டாலின்.

கொரோனா தடுப்பு தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

கொரோனா சிகிச்சைகான தகவல்களை பெற வார் ரூம் அமைக்கப்பட்டது.

மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதால் தமிழகத்துக்கு கூடுதல் ஆக்சிஜன் கிடைத்தது.

2.7 கோடி ரேஷன் கார்டு தாரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள அனைத்து கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் குழு.

சென்னையை போன்று பிற மாவட்டங்களில் வார் ரூம் அமைக்க யோசித்து வருகிறோம்.

தடுப்பூசி, ஆக்சிஜன் ஆகியவற்றை தமிழகத்திலேயே தயாரிக்க முடிவு.

ஊரடங்கை நீடிப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்படும்.

ஊரடங்கு மூலம் தொற்று பரவும் வேகத்தை குறைக்க நடவடிக்கை – ஸ்டாலின்.

மே 2-ம் தேதி முதல் கொரோனா தடுப்பு பணிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கலைஞர் பிறந்த நாளுக்கு முன்பாக கொரோனா நிவாரணத்தின் 2ம் தவணை ரூ.2ஆயிரம் வழங்க நடவடிக்கை – முதலமைச்சர்

ஆட்சியமைத்து 2 வாரங்களில் 16,938 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா இல்லை என்று சொல்லும் நாளே நமக்கு மகிழ்ச்சியான நாள்.

Exit mobile version