திண்டுக்கல் அருகே சோகம்: நெடுஞ்சாலை ரோந்து உதவி ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழப்பு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் நெடுஞ்சாலை ரோந்து வாகன உதவி ஆய்வாளராக (Highway Patrol SI) பணியாற்றி வந்தவர் திரு. பாண்டியராஜன். 1997-ம் ஆண்டு பேட்ஜை (1997 Batch) சேர்ந்த இவர், கடந்த 13.12.2025 அன்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். பணியில் இருந்த காவலர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம், சக காவலர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.















