தவெக தூத்துக்குடி நிர்வாகி அஜிதா தற்கொலை முயற்சியா?

5

தற்கொலை முயற்சி?

தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழக பொறுப்பாளராக பணியாற்றி வந்த அஜிதா ஆக்னல் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கவில்லை என கூறி விஜய் காரை மறைத்து போராட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதேசமயம் கட்சி நிர்வாகிகளாக அவரை தவிர்த்து விட்டு விஜய் வேறு சில பிரமுகர்களை நியமித்தார் இருந்தாலும் கடைசி மூச்சு வரை விஜய்க்காக உழைப்பேன் என்றார்.

இந்நிலையில் தூத்துக்குடி திரும்பிய அவர் திடீரென உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தூத்துக்குடியில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அஜிதா ஆக்னல் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டதால் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று சொல்லப்படுகிறது