Site icon News now Tamilnadu

தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் சொல்லைக் கேட்டு கொரோனா நிவாரண கழகப் பணியில் புதுக்கோட்டை திமுக பிரமுகர் பெரியார் நகர் கண்ணன்..

கொரோனா தொற்று காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் ஏழை எளிய மக்கள் 100 பேருக்கு தலா 800 ரூபாய் மதிப்புள்ள 18 வகையான மளிகை மட்டும் காய்கறி பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி வழங்கினார்..

கொரோனா தொற்று பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு ஆரோக்கிய மாதா மக்கள் மன்றத்தில் 100 பேருக்கு புதுக்கோட்டை பெரியார் நகர் சமூக ஆர்வலர்கள் மற்றும் திமுக தீவிர விசுவாசியான செயல்வீரர் கண்ணன் என்பவர் ஏற்பாட்டில் நபர் ஒருவருக்கு 800 ரூபாய் மதிப்புள்ள 18 வகையான மளிகை மட்டும் காய்கறி பொருட்கள் அடங்கியதொகுப்பினை சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி, புதுக்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா வழங்கினார்கள்…

18 வகையான மளிகை சாமான்கள், காய்கறி அடங்கிய தொகுப்பு பைகளை ஏழை எளிய மக்கள் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்தும் பெற்று கொண்டனர்.

இந்த நிகழ்வில் ஆர் டி ஒ டெய்சிகுமார், நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்பிரமணியன், திமுக பொதுக்குழு உறுப்பினர் ரா. முத்துக்குமார்,
நகரச் செயலர் நைனா முகம்மது, வீரமணி, கழக நிர்வாகிகள் சிற்றரசு, செல்லப்பன், கார்த்திக் சக்திவேல், மணி, பாபு பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்….

Exit mobile version