தமிழ்நாடு முழுவதும் இன்று ஒருநாள், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஜூலை மாதத்தை தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்திலும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும், தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதன்படி, நள்ளிரவு முதல், இன்று தளர்வற்ற முழு ஊரடங்கு நடைமுறைக்கு வந்துள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.
பால் விநியோகம், மருந்தகங்கள், மருத்துவமனைகள், மருத்துவமனை ஊர்திகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு வாகனங்கள் தவிர, பிற, அனைத்துவகை தனியார் வாகனங்களுக்கும் அனுமதி கிடையாது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகள் உட்பட அனைத்து பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை (23.8.2020) ஒருநாள், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு

