தமிழ்நாடு காவல்துறையின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், மாநிலம் முழுவதும் 3 புதிய சப்-டிவிஷன்கள் (உட்கோட்டங்கள்) மற்றும் 10 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை வரும் 22ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கிறார்.
புதியதாக உருவாக்கப்பட்ட உட்கோட்டங்கள்:
காஞ்சிபுரம் மாவட்டம் – உத்திரமேரூர்
நாகப்பட்டினம் மாவட்டம் – வேளாங்கண்ணி
நாமக்கல் மாவட்டம் – பள்ளிப்பாளையம்
அதேபோல், பொதுமக்களுக்கு விரைவான காவல் சேவைகள் வழங்கும் நோக்கில் 10 புதிய காவல் நிலையங்கள் தொடங்கப்படுகின்றன. அவை:
நாமக்கல் மாவட்டம் – கொக்கராயன் பேட்டை
தர்மபுரி மாவட்டம் – புளிக்கரை
சிவகங்கை மாவட்டம் – கீழடி
கள்ளக்குறிச்சி மாவட்டம் – களமருதூர்
திருவண்ணாமலை மாவட்டம் – திருவண்ணாமலை கோவில் காவல் நிலையம்
மதுரை மாநகரம் – சிந்தாமணி
மதுரை மாநகரம் – மாடகுளம்
கோயமுத்தூர் மாவட்டம் – நீலாம்பூர்
நெல்லை மாநகரம் – மேலவாசல்
திருப்பூர் மாவட்டம் – பொங்கலூர்















