Site icon News now Tamilnadu

தமிழகத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது திமுக சட்டமன்ற உறுப்பினரிடம் பெருமிதம் பேசிய நடிகர் விஜய் சேதுபதி!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் செல்வர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்பட சூட்டிங் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பாக நடந்து வருகிறது..

இந்த நிலையில் புதுக்கோட்டை பழைய தலைமை அரசு மருத்துவமனை நடைபெற்று வரும் படப்பிடிப்பில் மரியாதை நிமித்தமாக புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா தொழிலதிபர் எஸ்விஎஸ் ஜெயக்குமார் மற்றும் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நடிகர் விஜய் சேதுபதி மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்கள்..

அப்போது புதுக்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா விடம் பேசிய நடிகர் விஜய் சேதுபதி தமிழகத்தில் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்புடன் உள்ளது என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்..

மேலும் இந்த நிகழ்வில் ரசிகர்கள், ஆதரவாளர்கள் உடன் இருந்தனர்..

Exit mobile version