தமிழகத்தில் இன்று புதிய கட்டுப்பாடுகள் அமல்..

711

புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்:

பால், மருந்து கடைகள் இயங்க, எந்த தடையும் கிடையாது.

மளிகை, காய்கறிக் கடைகள், திங்கள் முதல் சனிக்கிழமை வரை, பகல், 12:00 மணி வரை மட்டும் இயங்கும்.

உணவகங்கள், பேக்கரிகள் அனைத்து நாட்களிலும், காலை, 6:00 மணி முதல், 10:00 மணி வரை; பகல், 12:00 மணி முதல், மாலை, 3:00 மணி வரை; மாலை, 6:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை செயல்படலாம்; பார்சல் வழங்க மட்டும் அனுமதி

டீக்கடைகள், அனைத்து இறைச்சி, மீன், கோழிக்கறி கடைகள், திங்கள் முதல், சனிக்கிழமை வரை, பகல், 12:00 மணி வரை மட்டும் திறந்திருக்கும்.

டீக்கடைகளிலும் பார்சல் வழங்க மட்டும் அனுமதி.

மற்ற கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு, அனைத்து நாட்களிலும், அனுமதி இல்லை

திரையரங்குகள், கலாசார செயல்பாடுகள், பொழுதுபோக்கு நடவடிக்கைகள், விளையாட்டு, திருவிழாக்கள் எதற்கும் அனுமதி கிடையாது

இன்று முதல், 20ம் தேதி வரை, அனைத்து அரசு அலுவலகங்களும், 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கும்.

அரசு ஊழியர்கள், ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை என, சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும்.

இதற்கான வருகைப் பதிவேடை, சூழ்நிலைக்கேற்ப, துறைத் தலைவர்கள், அரசு செயலர்கள், மாவட்ட கலெக்டர்கள், தயார் செய்ய வேண்டும்.

அலுவலகம் வராத ஊழியர்கள், எப்போது அழைத்தாலும் பணிக்கு வர தயாராக இருக்க வேண்டும்.

அவர்கள் தங்கள் பணியை, மாற்று வழியில் மேற்கொள்ள வேண்டும்.

‘ஏ’ குரூப் அதிகாரிகள் அனைவரும், அனைத்து பணி நாட்களும், தவறாமல் பணிக்கு வர வேண்டும்.

அலுவலகம் வராத ஊழியர்கள், முன் அனுமதியின்றி தலைமையிடத்தை விட்டு, வெளியில் செல்லக் கூடாது.

அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் துறைகள், வழக்கம் போல் செயல்படும்.