Site icon News now Tamilnadu

தமிழகத்தில் அதிகரித்து வரும் காய்ச்சல்! முதல்வர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் – முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழகத்தில் பன்றி காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது,தமிழக முதல்வர் உடனடியாக இதனை கவனத்தில் கொண்டு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சல் சிறப்பு வார்டுகளை தொடங்க வேண்டும்- முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் சில நாட்களாக பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது,

சென்னை எலும்பூர் மருத்துவமனை அதிகமான குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு படுக்கை வசதிகள் இல்லை என குற்றசாட்டுகள் எழுந்துள்ளது,அரசு உடனடியாக கூடுதல் கவனம் செலுத்தி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கூடுதல் படுக்கை வசதிகளை அமைத்து கொடுக்க வேண்டும்..

தமிழகத்தில் பன்றிக்காச்சல் அதிகமாக பரவி வருகிறது, தமிழக அரசு இதனை மறைத்து வருகிறது என கருதுகிறேன்,அதேபோல டெங்கு உள்ளிட்டகாய்ச்சல்களும் வேகமாக பரப்பி வருகிறது, இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் அரசு வெளிப்படை தன்மையோ செயல்பட வேண்டும்,

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் சிறப்பு வார்டுகளை உடனடியாக தொடங்க வேண்டும்,அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கூடுதல் மருத்துவர்களை நியமித்து குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் முன்னாள் அமைச்சர் என்ற முறையில் தமிழக முதல்வருக்கு இதனை எனது வேண்டுகோளாக வைக்கின்றேன்- புதுக்கோட்டையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி.

Exit mobile version