Site icon News now Tamilnadu

தனியார் மயமாக்கப்பட்ட (கார்ப்பரேஷன்)திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக துவக்கி வைத்தார்.

இந்தியாவில் உள்ள 41 படைகலன் தொழிற்சாலைகளை 7 கார்ப்பரேஷன் நிறுவனமாக (தனியார் மயம்) மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள பாதுகாப்புத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்று எதிர்க்கட்சிகள், பாதுகாப்புத்துறை தொழிற்சங்கங்கள் பலரும் எச்சரித்து வந்தனர்.

அனைவரது எதிர்ப்பை மீறி திருச்சி நவல்பட்டில் உள்ள இலகுரக ஆயுதங்களை தயாரிக்கும் ஓ.எஃப்.பி என்ற துப்பாக்கி தொழிற்சாலை பாதுகாப்புத் துறை நிறுவனம் தற்போது கார்ப்பரேசனாக மாற்றம் செய்யப்பட்டு அட்வான்ஸ்ட் வெப்பன்ஸ் அன்ட் எக்யூப்மென்ட் இந்தியா லிமிடெட் என்ற பெயரில் அக்டோபர் 01ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.

இந்நிலையில் கார்ப்பரேஷன் ஆக மாற்றப்பட்ட நிறுவனத்தின் அர்ப்பணிப்பு மற்றும் துவக்க விழா இன்று நடைபெற்றது.
இதனை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் முன்னிலையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக துவக்கி வைத்தார்.

துப்பாக்கி தொழிற்சாலை வளாகத்தில் உள்ள சீனியர் ஸ்டாப் கிளப் அரங்கில் பொது மேலாளர் (பொறுப்பு) ராஜீவ் ஜெயின் தலைமையில்
நடைபெற்ற நிகழ்வில் கூடுதல் பொது மேலாளர் ஏ.கே.சிங், இணை பொதுமேலாளர் குணசேகரன் உள்ளிட்ட துப்பாக்கி தொழிற்சாலை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

இதே போல் திருச்சியில் இயங்கி வரும் மற்றொரு பாதுகாப்பு துறை நிறுவனமான எச்.இ.பி.எஃப் கார்ப்பரேசனாக்கப்பட்டு முனிசன்ஸ் இந்தியா லிமிடெட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கார்ப்பரேசனாக மாற்றப்பட்ட
எச் இ பி எஃப் நிறுவனத்தின் துவக்கவிழாவானது எச்.இ.பி.எஃப் தொழிற்சாலை வளாகத்தில் ஆய்வு மாளிகையில் நடைபெற்றது, விழாவிற்கு ஆலையின் பொது மேலாளர் சஞ்சய் குமார் சின்கா தலைமை வகித்தார் இதில் உதவி பொது மேலாளர் எஸ்.ஏ.என் மூர்த்தி, இணை பொது மேலாளர்கள் செல்லப்பாண்டி, பிரபு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Exit mobile version