Site icon News now Tamilnadu

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

சென்னையில் வரும் 19ம் தேதி தொடங்கும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளுக்கான அழைப்பிதழை வழங்கினார்.

தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து, வரும் ஜனவரி 19-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் “கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள்-2023” நடத்தவுள்ளன.

இந்நிலையில், இன்று டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்த தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், பிரதமர் மோடி அவர்கள் போட்டியின் தொடக்க விழாவில் கலந்துக் கொள்ள வருமாறு அழைப்பிதழ் வழங்கினார்.

Exit mobile version