Site icon News now Tamilnadu

சென்னை பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் நாற்பத்தி எட்டாவது ஆண்டு விழா இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் மாதம் எட்டாம் தேதி செவ்வாய்க்கிழமை மாதா பிறந்த நாள் விழா அன்று நிறைவு பெறவுள்ளது

தாம்பரம்-27
சென்னை பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் நாற்பத்தி எட்டாவது ஆண்டு விழா இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் மாதம் எட்டாம் தேதி செவ்வாய்க்கிழமை மாதா பிறந்த நாள் விழா அன்று நிறைவு பெறவுள்ளது.
இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக வழக்கத்திற்கு மாறாகவும் தமிழக அரசு உத்தரவின்படி காவல்துறையின் அறிவுரையை ஏற்று மக்கள் பங்கேற்பு இல்லாத திருவிழாவாக கொண்டாடப்படும்.
இந்த விழாவை தொலைக்காட்சிகளிலும் மற்ற சமூக வலைதளங்களும் ஒளிபரப்பப்படும். மக்கள் வீட்டிலிருந்தபடியே அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்கலாம். பக்தர்கள் யாரும் நேரடியாகவும், பாதையாத்திரை யாகவும், ஆலயத்துக்கு வரும் எண்ணங்களையும் தவிர்க்கவும்.
ஏனெனில் காவல்துறையினர் உங்களை அனுமதிக்க மாட்டார்கள் மீறி வருபவர்களை காவல் துறையினர் மூலம் தடுத்து திருப்பி அனுப்பப்படுவார்கள் என்பதை ஆலயத்தின் பங்குத்தந்தை வின்சென்ட் சின்னதுரை பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

Exit mobile version