Site icon News now Tamilnadu

செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் வகுப்பறையில் மாணவர்களை ராகிங் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர்

கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளியின் வகுப்பறையிலேயே பள்ளி மாணவர்களை ராகிங் செய்த நடனம் ஆட வைப்பது போலவும் ஒரு மாணவர் இருக்கையில் அமர்ந்து கொண்டு மற்ற மாணவர்களை விசிறி மூலம் விசிறவைத்துள்ளனர் இதில் நடனம் ஆடாத மாணவர்களையும் காற்று வீசாத மாணவர்களை உடன் பயிலும் மாணவர்கள் அடித்துள்ளனர் கல்லூரிகளிலேயே மாணவர்களுக்குள் மாணவர்கள் ராக்கிங் செய்யக்கூடாது என கடுமையான சட்டங்கள் இருந்தாலும் இதுபோல பள்ளிகளில் மாணவர்கள் ராகிங் செய்வதை அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் யாரும் கண்டுகொள்ளாமல் உள்ளது வேதனை அளிப்பதாக மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

Exit mobile version