Site icon News now Tamilnadu

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை பிப்ரவரி 2ம் தேதி வெளியீடு!

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை பிப்ரவரி 2ம் தேதி வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெறாது என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஏற்கனவே தெரிவித்திருந்தார். மேலும், மே 4-ந்தேதி சிபிஎஸ்சி 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பான தேர்வுகள்  நடைபெறும், ஜூன் 10-ந்தேதி வரை தேர்வுகள் நடைபெறும், முடிவுகள் ஜூலை 15-ந்தேதி வெளியிடப்படும் என்றார்.

மார்ச் 1-ந்தேதி முதல் எழுத்துத் தேர்வு நடைபெறும் வரை செய்முறை / பிராஜெக்ட் /உள்மதீப்பீடு நடத்த பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை பிப்ரவரி 2ம் தேதி வெளியிடப்படும் என ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

Exit mobile version