கீரனூர் குளவாய்பட்டி அருகே கல்குவாரிக்கு அனுமதி வழங்கியதை ரத்து செய்ய வேண்டும் என கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் சந்தித்து மனு கொடுத்தனர்.

9

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா குளவாய்பட்டி கிராமத்தில் சட்டவிரோதமாக கல்குவாரிக்கு அனுமதி வழங்கியதை கண்டித்து கல்குவாரிக்கு அனுமதி வழங்கியதை ரத்து செய்ய வேண்டும் என கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் சந்தித்து மனு கொடுத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குளவாய்பட்டி கிராமத்தில் சட்டத்திற்கு விரோதமாக கல்குவாரி அங்கு இயங்கி வந்துள்ளது. அந்த கல்குவாரியினால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயத்தால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். எனவே இந்த கல்குவாரியை மூட வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அந்த கல்குவாரியை ரத்து செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் அதன் அருகிலேயே புதிய கல்குவாரி அமைப்பதற்கு மீண்டும் ஏ டி மைன்ஸ் அனுமதி வழங்கி உள்ளனர் அந்த கல்குவாரி அனுமதி பெறுவதற்கு அந்த கல் குவாரி அருகே பெரிய மின் உயர் கோபுரம் மின்விளக்கு மற்றும் குளங்கள் மேய்ச்சல் நிலங்கள் என அருகே இருந்ததை மறைத்து சட்டத்துக்கு விரோதமாக அனுமதி பெற்றுள்ளனர்.

ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள கல்குவாரியினால் அதிலிருந்து வரக்கூடிய தூசிகள் மற்றும் புகையால் குடிநீர் குளத்தில் உள்ள குடிநீர் மற்றும் விவசாய நிலங்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இதனிடையே மீண்டும் அதன் அருகையே மக்களை அச்சுறுத்து வகையில் கல்குவாரிக்கு அனுமதி வழங்கியதை கண்டித்தும் இதனை உடனடியாக மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து கல்குவாரியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டுமென அக்கிரமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.