Site icon News now Tamilnadu

கவிநாடு கிழக்கு ஊராட்சியில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் மழைக்கால மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது!

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கவிநாடு கிழக்கு ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் டீம் ஸ்பெஷாலிட்டி தனியார் மருத்துவமனை சார்பில் ஆட்டான்குடியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டம் மழைக்கால மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த மழைக்கால மருத்துவ முகாமில் கவிநாடு கிழக்கு ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் மூலம் தங்களை மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு மருத்துவரின் ஆலோசனைகள் மருந்துகள் பெற்று பயனடைந்தனர்..

இந்த மருந்துவ முகாமில் கவிநாடு கிழக்கு ஊராட்சி மன்ற தலைவர் ரங்கம்மாள் பழனிசாமி, டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் மருத்துவர் சலிம், ஒன்றிய கவுன்சிலர் ஜெயந்தி வெள்ளைச்சாமி, துணை தலைவர் லெட்சுமி ராஜேந்திரன், கவிநாடு கிழக்கு திமுக கிளைச் செயலர் வெற்றி செல்வம், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் ராஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் சதிஷ் உள்ளிட்ட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்…

Exit mobile version