என் உத்தரவை யாரும் மதிக்கலை… பதில் சொல்லியே ஆக வேண்டும்..! நீதிபதி ஜி.ஆர் சாமிநாதன் ஆவேசம்
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் என் உத்தரவை அதிகாரிகள் யாரும் மதிக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருக்க சட்டம், ஒழுங்கை காரணம் காட்டுவது நியாயமற்ற செயல்
‘‘திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் என் உத்தரவை அதிகாரிகள் யாரும் மதிக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருக்க சட்டம், ஒழுங்கை காரணம் காட்டுவது நியாயமற்ற செயல்’’ எனக்கூறி உரிய பதிலை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.
‘‘திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் என் உத்தரவை அதிகாரிகள் யாரும் மதிக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருக்க சட்டம், ஒழுங்கை காரணம் காட்டுவது நியாயமற்ற செயல்’’ எனக்கூறி உரிய பதிலை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த 1-ம் தேதி உத்தரவிட்டார். அந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை என்பதால் அதிகாரிகள் மீது அதே நீதிபதி, கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்பாக விசாரித்து வருகிறார்.
இந்த வழக்கில் இன்று தமிழக தலைமைச் செயலாளர், காவல்துறை டி.ஜி.பி ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி, இந்த வழக்கின் விசாரணை இன்று பிற்பகலில் வந்தது. அப்போது தலைமை செயலாளர் உள்ளிட்டோர் வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக ஆஜராகினர்.
தலைமை செயலாளர் கூறுகையில், எந்த உள்நோக்கத்துடனும் நாங்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை. ஏற்கனவே உள்ள உத்தரவுகளின் அடிப்படையில்தான் பிறப்பித்தோம். தனி நீதிபதியின் உத்தரவை நிறைவேற்றக்கூடாது என்பதில் எந்த கருத்தும் இல்லை என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி சுவாமிநாதன், ‘‘திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் இருப்பது என்ன மாதிரியான செயல்? என் உத்தரவை அதிகாரிகள் யாரும் மதிக்கவில்லை.
தீபமேற்ற உத்தரவிட்ட பிறகு 144 தடை உத்தரவு பிறப்பித்தது ஏன்? நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததற்கு அதிகாரிகள் பதில் சொல்லியே ஆக வேண்டும். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருக்க சட்டம் – ஒழுங்கை காரணம் காட்டுவது என்னவிதமான செயல்? உரிய பதிலை விரிவான மனுவாக தாக்கல் செய்ய அவகாசம் தருகிறேன் என உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணை வரும் ஜனவரி 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில், மதுரை ஆட்சியர், காவல் ஆணையர் ஆகியோர் நேரில் ஆஜராகி இருந்தனர்.















