Site icon News now Tamilnadu

உலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் மாணவிகள் ஒன்றிணைந்து மரக்கன்றுகளை நடவு செய்து பெண் குழந்தை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்..

உலக பெண் குழந்தைகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று உலக பெண் குழந்தைகள் தினம் மருத்துவ கல்லூரி முதல்வர் பூவதி தலைமையில் நடைபெற்றது. இதனையடுத்து மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள பிரேத பரிசோதனை கூட வளாகத்தில் மரக்கன்றுகள் மற்றும் புதிய மலர்ச் செடிகளை மருத்துவக்கல்லூரி முதல்வர் தலைமையிலான மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும், மாணவிகள் ஆகியோர் கூட்டாக இணைந்து நடவு செய்தனர்.
அப்போது அவர்கள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதி மொழியையும் அவர்கள் எடுத்துக்கொண்டனர். மேலும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களை தடுக்கவும் அது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் எனவும் மருத்துவ கல்லூரி முதல்வர் பூபதி அப்போது பேசினார். இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கண்காணிப்பாளர் மரு. ராஜ்மோகன் துணை முதல்வர் மரு. கலையரசி நிலைய மருத்துவர் மரு. இந்திராணி மற்றும் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த சட்ட மருத்துவத் துறை மருத்துவர்கள் மரு. தமிழ்மணி மரு. வள்ளியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version