ஆலங்குடியில் இருதய நல சிறப்பு சிகிச்சை முகாம்! 150 பேர் பங்கேற்பு

511

இருதய நல சிறப்பு சிகிச்;சை முகாம்: 150 பேர் பங்கேற்பு.
ஆலங்குடி.ஜுலை:3
ஆலங்குடியில் எஸ்.பி.ஐ., ஹெல்த் இன்சூரன்ஸ், திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனை திருச்சி, ஆலங்குடி கோகுல் இசேவை மையம் ஆகியோர் இணைந்து நடத்திய இருதய நல சிறப்பு சிகிச்சை முகாம் ஆலங்குடி புனித அற்புத மாதா நடுநிலைபள்ளியில் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி புனித அற்புத மாதா நடுநிலைபள்ளியில் எஸ்.பி.ஐ., ஹெல்த் இன்சூரன்ஸ், திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனை திருச்சி, ஆலங்குடி கோகுல் இ சேவை மையம் ஆகியோர் இணைந்து நடத்திய இருதய நல சிறப்பு சிகிச்;சை முகாமில், திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனை இருதய நல சிறப்பு டாக்டர் ரவீந்திரன் மற்றும் மருத்துவ குழுவினர்கள் டாக்டர்கள் விக்னேஸ்வரன், அருண்குமார், அஜய்கிஷோர், ஆர்த்திஸ்ரீ, பிரியங்கா மற்றும் அப்போலோ பொதுநிலை மேலாளர் சமூவேல், மார்கெட்டிங் மேனேஜர் கோபிநாத், தனவேந்தன், ஆலங்குடி புனித அற்புத மாதா நடுநிலைபள்ளி தாளாளர், பங்குதந்தை ஆர்,கே.சாமி, எஸ்.பி.ஐ., ஹெல்த் இன்சூரன்ஸ் சேல்ஸ் மேனேஜர் திருப்பதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த இலவச மருத்துவ முகாமில் இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு, ஈ.சி.ஜி., எஃகோ கார்டியோகிராம், இதய நோய் சோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இம்முகாமில் 150க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.