Site icon News now Tamilnadu

அறந்தாங்கி அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கிய அதிமுக பிரமுகர்!

அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக அறந்தாங்கி எழில்நகரை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 47) பணியாற்றி வருகிறார். நேற்று இவர் பணியில் இருந்த போது, ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் கோட்டையை சேர்ந்த மண்டலமுத்து (56) பணம் கேட்டுள்ளார். இதற்கு கார்த்திகேயன் தர மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மண்டலமுத்து கார்த்திக்கேயனை தாக்கினாராம். இதுகுறித்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து மண்டலமுத்துவை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அறந்தாங்கியில் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version