Site icon News now Tamilnadu

அரிமளம் அருகே சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது!

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம்,கீழப்பனையூர் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது..

இம்முகாமிற்கு ஒன்றிய குழு தலைவர் திருமதி. மேகலாமுத்து அவர்களும், ஊராட்சி மன்ற தலைவர் திரு. பழனியப்பன் ராமசாமி அவர்களும் தலைமை வகித்தனர்.

இம்முகாமை கால்நடை மருத்துவர்களுடன் இணைந்து புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவர்களும் நடத்தினார்.இதில் சுமார் 100 பசுமாடுகள்,48 கன்று குட்டிகள்,12 காளைகள் ஆகியவைகளுக்கு கோமாரி தடுப்பூசி போடப்பட்டது. கோழிகளுக்கு சத்து மருந்துகள் வழங்கப்பட்டது.

Exit mobile version