Site icon News now Tamilnadu


அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்த தமிழக அரசு உத்தரவு!

சென்னை
நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பேருந்துகளில் சிசிடிவி கேமிராக்களை பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார். சென்னையில் 1,400 பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு பல வழித்தடங்களில் விரைவில் விரிவுபடுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version