Site icon News now Tamilnadu

அனைவரும் மெச்சத்தக்க வகையில் செஸ் ஒலிம்பியாட் நடந்து முடிந்துள்ளது! முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

அனைவரும் மெச்சத்தக்க வகையில் செஸ் ஒலிம்பியாட் நடந்து முடிந்துள்ளது

அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

செஸ் போட்டியில் வென்றவர்களை விட நான் மகிழ்ச்சியாக உள்ளேன்

மிக குறுகிய காலத்தில் 4 மாதத்தில் செஸ் ஒலிம்பியாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

வெளிநாட்டு வீரர்கள் சமூக வலைதளங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் ஏற்பாடுகள் குறித்து பாராட்டி வருகின்றனர்.

விளையாட்டில் முன்னோடி மாநிலமாக ஆக்குவதற்கு திராவிட மாடல் தமிழ்நாடு அரசு திட்டங்களை தீட்டி வருகிறது.

ஒலிம்பிக் பதங்களை வெல்லும் வகையில் வீரர்களை உருவாக்கும் பொருட்டு ரூ.25 கோடி மதிப்பில் “ஒலிம்பிக் தங்க வேட்டை” திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி, சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடர், ஆசிய பீச் வாலிபால் தொடர் ஆகியவற்றை சென்னையில் நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது.

சிலம்பத்திற்கு தேசிய அங்கீகாரம் பெற்று தர முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.

விளையாட்டுத்துறை முன்னிலும் அதிக பாய்ச்சலுடன் செயல்படும், எதிலும் வெற்றி தோல்வி முக்கியமல்ல, பங்கேற்பே முக்கியம்

அன்புள்ள வெளிநாட்டு வீரர்களே சென்னையை மறந்துவிட வேண்டாம்; உங்களுக்காக ஒரு சகோதரன் இங்கே இருக்கிறேன்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.

Exit mobile version