வாலாஜாவில் நில உட்பிரிவு மாற்றுவதற்காக 3000 லஞ்சம் வாங்கிய நில அளவையர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா அலுவலகத்தில் நில அளவையராக பணியாற்றி வரும் அரவிந்த் (26) அரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் சுதகார் (43) வாலாஜா வட்டத்துக்குட்பட்ட செங்காடு கிராமத்தில் வீட்டு மனை வாங்கி கடந்த 9.2.2024 ஆம் தேதி பத்திரப்பதிவு செய்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து வாங்கப்பட்ட நிலத்தை உட்பிரிவு செய்வதற்காக உரிமம் பெற்ற நில அளவையர் அரவிந்தை அணுகியுள்ளார். அப்பொழுது அரவிந்த் வீட்டு மனையை உட்பிரிவு செய்து மாற்ற ஐந்தாயிரம் கேட்டதாக தெரிகிறது அதன் பின் 3 ஆயிரம் கொடுப்பதாக ஜெயராமன் ஒத்துக்கொண்டு வந்துள்ளார் .
இந்த நிலையில் இன்று அலுவலகத்தில் அதற்கான தொகை 3 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலிசார் ரசாயனம் தடவி பணத்தை வழங்கியுள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கணேசன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.