வாய் இல்லாத ஜீவராசிகளுக்கு தண்ணீருடன் உணவளித்து உதவிய புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம்..

921

கொரோனா காலகட்டத்தில் மனிதன் அன்றாடம் உணவுகளுக்கு கஷ்டப்பட்டு உழைத்து ஏதாவது செய்து தனது குடும்பத்துடன் வாழ ஏதாவது திட்டமிட்டு வாழ்ந்து வருகின்றனர்..

ஆனால் வாய் இல்லாத ஜீவராசிகள் என்ன செய்யும் பாவம்?

ஆனால் அதற்குள் தீர்வு காணும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் தலைவர் ஜெ. பர்வேஸ் மற்றும் நிர்வாகிகள் எடுத்துள்ள முயற்சிக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்து பாராட்டி வருகின்றனர்…

என்ன நடந்தது இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் தலைவர் ஜெ. பர்வேஸ் கூறுகையில்

“எம்மதமும் சம்மதம்” தளபதி விஜய் அண்ணன் மக்கள் இயக்கம் மக்களுக்கான இயக்கம் மட்டும் அல்லாமல் வாயில்லா ஜீவன்களுக்கும்மான இயக்கம் இவ்வுலகில் வாழும் எவ் இனம் ஆனாலும் அவர்களுக்கு ஒரு கஷ்டம் என்ற நிலையில் வரும் சூழலில் முதலில் நிற்பது நமது தளபதி விஜய் அண்ணன் மக்கள் இயக்கம் என்பதற்கு எடுத்துக்காட்டாக

புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி அருகில் அமைந்துள்ள ஸ்ரீ ஐம்பத்து நான்கு ஆஞ்சநேயர் ஆலயத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றி திரிந்து வருகின்றனர் இது வெயில் மற்றும் கொரோனா ஊரடங்கு காலம் என்பதாலும் சுற்றிலும் காடு போல் இருப்பதாலும் குரங்குகளுக்கு தண்ணீர் கூட கிடைக்காத சூழ்நிலை ஆகையால் நிரந்தரமாக குரங்குகளுக்கு தண்ணீர் கிடைத்திடும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட தலைமை தளபதி விஜய் அண்ணன் மக்கள் இயக்கம் சார்பாக தண்ணீர் தொட்டி புதிதாக கட்டப்பட்டு குரங்குகளின் பயன்பாடுக்கு தண்ணீர் நிரப்பி திறக்கப்பட்டும் குரங்குகளுக்கு வாழைப்பழங்கள் வழங்கியும் மேலும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது என்று கூறினார்..