வறுமை ஒழிப்பு தினத்தில் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை

1393

வறுமை ஒழிப்பு தினத்தில் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை

எனது பிறந்த நாளையொட்டி வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்கட்சித் தலைவர் முக.ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் மற்றும் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசனுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதேபோல், பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் கோ.க.மணி, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் உள்ளிட்டோருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவுத், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்கும் நன்றிகள்.

தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துகளை பகிர்ந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ சி சண்முகம், பேராயர் எஸ்றா சற்குணம், நடிகர்கள் விவேக், சத்தியராஜ், தியாகு, சிவகார்த்திகேயன், நடிகைகள் குஷ்பு, அக்ஷரா கவுடா மற்றும் அம்மா புரடக்ஷன் திரைப்பட தயாரிப்பாளர் சிவா ஆகியோருக்கும் நன்றிகள்.

திரையுலகினர், திரைப்பட செய்தி தொடர்பாளர்கள் மற்றும் தொலைநகல், வாழ்த்து கடிதங்கள், மின்னஞ்சல், E-Post. டிவிட்டர். பேஸ்புக். வாட்ஸ்ஆப். இணையதளம் ஆகியவற்றின் மூலம் எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தவர்கள் மற்றும் பூங்கொத்து கொடுத்து அனுப்பிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இதயமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

வறுமை ஒழிப்பு நாளில் தமிழகம் முழுவதும் தொலைக்காட்சி வாயிலாகவும், பிரம்மாண்ட அளவிலான சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள், பேப்பர் விளம்பரங்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிவரும் என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளான மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோருக்கும் இந்த இனிய நாளில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here