புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தனித் தொகுதிக்கு சீட் கேட்கும் ஆசிரியர் மாரிமுத்து! வாய்ப்பு அளிக்கபடுமா?

1332

புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை தனித்தொகுதி ஆகும்..அஇஅதிமுக, திமுக மாறி மாறி வெற்றி பெற்றாலும் தற்போது 2021 நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் கந்தர்வகோட்டை தனித்தொகுதியின் தேர்தல் ரிசல்ட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.. இதில் வேட்பாளர் தேர்வு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது..

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கந்தர்வகோட்டை தனி சட்டமன்ற தொகுதிக்கு விருப்ப மனுக்கள் அளித்ததில் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் நேர்காணல் மூவர் கலந்து கொண்டனர்..
இதில் ஆசிரியர் மாரிமுத்து ஒருவர் ஆவார்..

ஆனால் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நார்த்தாமலை ப. ஆறுமுகத்திற்கு கந்தர்வகோட்டை சட்டமன்ற தனி தொகுதி வாய்ப்பு அளித்து வெற்றி பெற்றார்..

ஆனால் இம்முறை 2021 சட்டமன்றத் தேர்தலில் புதியவர்கள் வாய்ப்பு அளிக்கப்படும் என்று மேலிட தகவல் வெளியாகியுள்ளது..

இதனால் தற்போது விடா முயற்சியாக இந்த முறையும் அதிமுக சார்பில் கந்தர்வகோட்டை தனித் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார் ஆசிரியர் மாரிமுத்து..

ஆசிரியர் மாரிமுத்து கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகியாக திறம்படச் செயல்பட்டவர் என்பதும் 10 ஆண்டுகாலமாக கந்தர்வகோட்டை தனித்தொகுதியில் ஆசிரியராக பணியாற்றி நற்பெயரையும் பெற்றவர் என்பதால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், கந்தர்வகோட்டை தொகுதி மக்கள் மத்தியில் நற்பெயரையும் வரவேற்பையும் பெற்றவர் என்பதாலும் இவரது உறவினர் கந்தர்வகோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் அதிக உறவினர்கள் வசித்து வருவதால் இவருக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அஇஅதிமுகவினர் மத்தியில் பேச்சுக்கள் கிசுகிசுக்கப்படுகிறது..