புதுக்கோட்டை: கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. 5 மாதங்களுக்கு பிறகு தமிழக அரசு தளர்வுகள் அறிவித்து கோவில்களை திறக்க அனுமதி வழங்கியது. அதன்படி கடந்த 1-ந் தேதி முதல் அனைத்து கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் திறக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. இதற்கிடையே கொரோனா ஊரடங்கு காலத்திற்கு முன்பு வரை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. பழனி தண்டாயுதபாணி கோவில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்களில் 24 மணி நேர அன்னதானமும் நடைபெற்று வந்தது. இவை அனைத்தையும் கொரோனா ஊரடங்கு தகர்த்துவிட்டது. தற்போது கோவில்கள் திறக்கப்பட்ட போதிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் அன்னதான திட்டம் தொடங்குவதில் காலதாமதம் ஆகலாம் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் புதுக்கோட்டையில் உள்ள கோவிலில் பக்தர்களுக்கான அன்னதானம் பார்சலில் வழங்கப்படுகிறது. நகர் பகுதியில் உள்ள சாந்தநாத சுவாமி கோவில் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைப்படி நேற்று முன்தினம் முதல் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கொரோனாவுக்கு முன்பு இந்த கோவிலில் தினமும் 100-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது கொரோனா பரவல் அச்சம் காரணமாக பக்தர்களை அமர வைத்து இலை போட்டு அன்னதானம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக கலவை சாதம் பொட்டலங்களாக தயார் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. தயிர் சாதம், லெமன் சாதம், தக்காளி சாதம் மற்றும் அதனுடன் ஊறுகாய் பாக்கெட்டும் இணைத்து கொடுக்கப்படுகிறது. இதற்காக கோவில் வளாகத்தில் உணவு தயார் செய்யும் ஊழியர்கள் மதிய அன்னதானமாக இதனை பார்சலில் கட்டி பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். அதனை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையாக நின்று வாங்கி செல்வதோடு, இதற்கான நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்தனர்.
- Advertisement -
Latest article
சிறுவர், சிறுமியர் களுடன் பம்பரம் விளையாடி மகிழ்ந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!
சவால் விட்ட சிறுவர் சிறுமிகள்…
சொன்னபடியே செய்து காட்டிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்…
விராலிமலை கோடாலிகுடி அருகில் கழக இல்ல விழாவிற்கு சென்ற இடத்தில், சிறுவர்கள் பம்பரம் விளையாடி கொண்டிருந்ததை கண்டு தானும் பம்பரம் சுற்ற...
அறமனச் செம்மல் சீனு. சின்னப்பா: உழைப்பால் உயர்ந்து மக்கள் மனங்களை வென்ற பண்பாளர்!
அறமனச் செம்மல் சீனு. சின்னப்பா: உழைப்பால் உயர்ந்து மக்கள் மனங்களை வென்ற பண்பாளர்!
"உழைப்பே உயர்வு" என்ற தாரக மந்திரத்தை வெறும் சொல்லாக அல்லாமல், தனது வாழ்வியலாகவே மாற்றி வாழ்ந்து காட்டியவர் மறைந்த சீனு....
சாத்தான்குளம் அனைத்து குற்றவாளிகளும் மேல்முறையீட்டு மனுக்களை ஜூன் 1ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு!
வழக்கின் முக்கியத்துவம் கருதி ஜூன் 4ம் தேதி முதல் தினசரி விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அறிவிப்பு
விசாரணை நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை உறுதி செய்யக்கோரி சிபிஐ தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது
இதற்கிடையே குற்றவாளியான முன்னாள்...















