திருமணம் நடந்து 2 மணி நேரத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் திருமண ஆல்பம் டெலிவரி.

597

நவீன நாகரிக வளர்ச்சி என்பது மனிதர்கள் பிரமிக்கும் வகையில் உயர்ந்து வருகிறது. டிஜிட்டல் யுகத்தில் தினசரி பல புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் படைப்புகளை விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.

இதில் சமீப காலமாக ஏஐ தொழில்நுட்பம் மனிதர்கள் செய்யக்கூடிய பல செயல்களை எளிதில் மனிதர்களை விட வேகமாக செய்து அசத்தி வருகிறது.

இந்த நிலையில் சேலம் மாநகர் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மோகனசுந்தரம் மற்றும் பிரீத்தி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் வந்திருந்த அனைவருக்கும் பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பல்வேறு புதிய முயற்சிகளை செய்தனர்.

அதிலும் குறிப்பாக ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கார்னிவல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் மேடையில் மணமகன், மணமகளுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் உடனடியாக க்யூ ஆர் ஸ்கேனர் முறையில் ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்யும் வகைகள் அமைக்கப்பட்டிருந்தது.

மேலும் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பல தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உடனடியாக மேடையில் அமர்ந்திருந்த திருமண தம்பதியினரிடம் கார்னிவல் ஸ்டுடியோஸ் பரிசாக வழங்கப்பட்டது.

திருமணம் நடந்து முடிந்த இரண்டு மணி நேரங்களில் திருமண ஆல்பம் கொடுக்கப்பட்டதால் புதுமண தம்பதியினர் மற்றும் உறவினர்கள் ஆச்சரியத்துடன் மகிழ்ச்சி அடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here