தளபதி விஜய் தான் என் உலகம், விஜய் தான் எல்லாம்.. புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்க புதுக்கோட்டை மாவட்ட தலைவரும் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர் ஆன ஜெ. பர்வேஸ்.

1465

அனைத்து மாவட்டங்களுக்கும் முன்னுதாரணமாக விளங்கும் புதுக்கோட்டை மாவட்ட நடிகர் விஜய் மக்கள் இயக்கம்..
தமிழக திரை உலகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் நடிகர் விஜய் அவர்களுக்கு எல்லை இல்லா ரசிகர் பட்டாளம் உள்ளது..

தமிழக முழுவதும் ஏகப்பட்ட இளைஞர்களின் இளையதளபதியாகவும் ரோல் மாடலாகவும் நடிகர் விஜய் விளங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..

அதேபோலவே பெண்கள் மத்தியிலும் குழந்தைகளின் மனங்களிலும் மத்தியிலும் நடிகர் விஜய் அவர்களுக்கு எப்போதும் சிறப்பான இடம் உண்டு..

நடிகர் விஜய் ரசிகர் மன்றங்களை பொது மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில்இயக்கமாக மக்கள் இயக்கமாக மாற்றினார்..

தற்போது கடந்த பத்து ஆண்டுகளாக புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவரும் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர் ஆன ஜெ . பர்வேஸ் பொறுப்பேற்ற நாட்களிலிருந்து தற்போது வரை எண்ணிலடங்கா பல்வேறு நலத்திட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார்..

அதேபோலவே விஜய் திரைப்படம் வெளியாவது என்றால் சொல்லவே வேண்டாம் ஜெ. பர்வேஸ் அவர்களுக்கு மேளதாளம் முழங்க, இனிப்புகள் வழங்கியும், எண்ணில் அடங்கா பிளக்ஸ் பேனர்கள், இலவச உணவு வழங்குதல், கோவில்களில் அர்ச்சனை தினம் அமர்க்களப்படுத்திவிடுவார்..

அதே புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 ஒன்றியங்களிலும் லட்சகணக்கான விஜய் ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கத்தில் இணைந்து சமூக நலத்திட்ட பணிகளில் ஈடுபட்ட வருகின்றனர்..

நடிகர் விஜய் என்ற ஒன்றை சொல்லுக்காக புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்..
கஜா புயல் நிவாரண உதவிகள், விலையில்லா விருந்தகம், ஏழை எளிய மக்களுக்கு சீருடைகள், ஆட்டோ ஓட்டுனர்கள்சீருடை வழங்குதல், தூய்மை பயனாளர்களுக்கு சீருடைகள் வழங்குதல், கஜா புயல் நிவாரண பணியாற்றி ஊழியர்களுக்கு உதவிகள், அதேபோல் ஏழை எளிய மக்களுக்கு மளிகை பொருட்கள் இலவசமாக வழங்குதல்,
கொரனோ நிவாரண உதவிகள் என எண்ணிலடங்கா உதவிகளை விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி. ஆனந்த் (முன்னாள் எம்எல்ஏ) அவர்கள் அறிவுறுத்தல் படியும் சிறப்புற பணியாற்றி வருகிறார் ஜெ. பர்வேஸ் மற்றும் புதுக்கோட்டை நிர்வாகிகள்..

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும், அனைத்து ஒன்றியங்களிலும் லட்ச கணக்கில் ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கத்தில் இணைந்து பல்வேறு நலத்திட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here