Site icon News now Tamilnadu

தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி க்கு எதிராக சமூக வலைதளங்களில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள், அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கடும் தாக்கு!

தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி க்கு எதிராக சமூக வலைதளங்களில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் கடும் தாக்கு!

இன்று புதுக்கோட்டை நகராட்சி சார்பில் திறக்கப்பட்ட நீர்தேக்கதொட்டி, நவின நூலகம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கரை “மனநோயாளி” என்ற வார்த்தையை கூறி பேட்டி அளித்தார்…

இதனை கண்ட முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள், அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்..

இதனா‌ல் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதியை சமூக வலைதளங்களில் தாக்கி கண்டன பதிவுகளை பதிவேற்றம் செய்து வருகிறார்கள்..

இதனால் சமூக வலைதளங்களான வாட்சப், பேஸ்புக், உள்ளிட்ட சமூக வலைதளங்களில் திமுக அஇஅதிமுக இடையே சற்று பரபரப்பாக மாறி உள்ளது..

Exit mobile version