சென்னையின் ராபின் வுட் சீசிங் ராஜா அதிகாலை போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
A++ கிரேடு முக்கிய கிரிமினல்
இவர் தான் சென்னை கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த “சீசிங்”ராஜா வில்லங்கமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை சீசிங்(பறிமுதல்)
செய்தல்,
தொழிலதிபர்களிடம் மிகப்பெரிய அளவில் “கட்டிங்” மாமூலாக வாங்குதல்,கொலை,கொலை முயற்சி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் கிழக்கு தாம்பரம் பகுதியில் உள்ள சேலையூர் காவல் நிலையத்தில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளி
7 முறை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட “களம் கண்ட வேங்கை”.
தற்போது பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் 3 குற்றவாளிகளான சம்போ செந்தில், வழக்கறிஞர் ஒற்றை கிருஷ்ணன்,சீசிங் ராஜா ஆகியோரில் ஒருவர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 29வது குற்றவாளி
தலைமறைவாக ஆந்திராவில் பதுங்கி இருந்த சீசிங் ராஜாவை நேற்று(22-09-2024) நள்ளிரவில் கைது செய்த சென்னை மாநகர போலீசார் அவரை சென்னைக்கு அழைத்து வந்த போது “வழக்கமாக” நீலாங்கரை அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற போது என் கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.