Home அரசியல் சிறுவர், சிறுமியர் களுடன் பம்பரம் விளையாடி மகிழ்ந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!

சிறுவர், சிறுமியர் களுடன் பம்பரம் விளையாடி மகிழ்ந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!

91

சவால் விட்ட சிறுவர் சிறுமிகள்…

சொன்னபடியே செய்து காட்டிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்…

விராலிமலை கோடாலிகுடி அருகில் கழக இல்ல விழாவிற்கு சென்ற இடத்தில், சிறுவர்கள் பம்பரம் விளையாடி கொண்டிருந்ததை கண்டு தானும் பம்பரம் சுற்ற வருவதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதை கண்டு உற்சாகமடைந்த சிறுவர்கள் உங்களால் பம்பரம் சுற்ற முடியாது என்று சவால் விட்டனர்.

இதையடுத்து சிறுவர்களின் பம்பரத்தை வாங்கி வீட்டின் முன்புறம் சுற்றி கையில் எடுத்து சுழற்றி காட்டியவுடன் சுற்றி இருந்த அனைவரும் உற்சாகமாக கை தட்டி மகிழ்ந்தனர்.

தேர்தல் பிரச்சாரம் முடிந்தவுடன் அவரவர் ஓய்வு எடுக்க சென்றுள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதி மக்களுடன் நேரத்தை செலவழிப்பதை தன்னுடைய மகிழ்ச்சியாக கொண்டுள்ளார்.

error: Content is protected !!