Site icon News now Tamilnadu

குமரிக்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் வாகனம் மீது டம்ளரை வீசிய டீ மாஸ்டர் கைது

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.காவல்கிணறு விலக்கு அருகே முதல்வர் வாகனம் வரும்போது அவரது காரின் மீது டீக்கடையில் மாஸ்டராக பணிபுரியும் பாஸ்கர் என்பவர் சில்வர் கிளாஸ் ஒன்றை எறிந்துள்ளார். இதையடுத்து பணகுடி போலீசார் டீ மாஸ்டர் பாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.முதல்வர் வரவேற்பு இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இந்த கடை இருந்தபோதிலும் போலீசார் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது. கடையில் தேநீர் குடிக்க கூடியிருந்த மக்கள் மற்றும் முதல்வரை காண கடை வாசலில் கூடியிருந்த மக்களை அங்கிருந்து செல்லும்படி காவல்துறையினர் மிரட்டியதாக தெரிகிறது. கடை விற்பனை பாதிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த  டீ மாஸ்டர் முதல்வர் சென்ற கார் மீது டம்ளரை வீச முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது

Exit mobile version