அரசு அனுமதியின்றி தன்னிச்சையாக விடுமுறை அளித்த பள்ளிகளுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள, சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக, மக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதால், தனியார் பள்ளி நிர்வாகங்கள் அதிருப்தி அடைந்துள்ளன.
இதுதொடர்பாக, தனியார் பள்ளிகள் சங்கம், தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு, தனியார் பள்ளி தாளாளர்கள் நலச் சங்கம் ஆகியன, நேற்று போராட்டத்தை அறிவித்தன.
தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்றக் கோரி, பள்ளிகளை மூட நேற்று சங்கங்கள் அழைப்பு விடுத்தன.
இதனால், 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளிகள், நேற்று செயல்படவில்லை.