Site icon News now Tamilnadu

5 அரசு அதிகாரிகள் உட்பட 6 பேரை லஞ்ச ஒழிப்புத்துறை கைது தமிழகத்தில் ஒரே நாளில் 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!

தமிழகத்தில் ஒரே நாளில் 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

சேலம், நீலகிரி, செங்கல்பட்டு, கரூர் ஆகிய மாவட்டங்களில் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகார்களின் அடிப்படையில், 5 அரசு அதிகாரிகள் உட்பட 6 பேரை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்தது.

சேலம்: தனி பட்டா பரிந்துரைக்க ரூ.4,000 லஞ்சம் கேட்ட VAO சரவணன், தனிநபர் மாதவன் கைது.

நீலகிரி: குடிநீர் தொட்டி பணிக்கான ரூ.6.9 லட்சம் பில் தொகையை விடுவிக்க ரூ.20,000 கேட்ட ஊராட்சி செயலர் கார்த்திக் கைது.

செங்கல்பட்டு: 6 புதிய மின் இணைப்புகளுக்கு ரூ.20,000 லஞ்சம் கேட்டதாக மின்வாரிய உதவிப் பொறியாளர் ஜெயராணி, ஃபோர்மேன் சரவணன் கைது.

கரூர்: சொத்து வரி மதிப்பீட்டுப் பணிக்கு ரூ.3,000 லஞ்சம் கேட்ட மாநகராட்சி வரி வசூலிப்பாளர் லோகேஸ்வரன் கைது. கைது செய்யப்பட்ட 6 பேரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.

Exit mobile version