4 பேரை கொன்ற ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல உத்தரவு

415

நீலகிரி,

நீலகிரி கூடலூரில் 4 பேரை கொன்ற ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல தமிழக முதன்மை வன அதிகாரி சேகர் குமார் நீரஜ் உத்தரவு பிறப்பித்துள்ளளார். டி23 என்ற புலி இதுவரை 4 பேரை கொன்றுள்ளது. கடந்த 7 நாள்களாக வனத்துறையினர் வைத்து கூண்டுகளில் புலி சிக்காததால் சுட்டுக்கொல்ல வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

13 வயதான புலி கடந்த 4 நாட்களுக்கு மேலாக வனத்துறையின் வலையில் இருந்து தப்பித்து வருகிறது. புலியை கண்டுபிடிக்க ட்ரோன்கள், மோப்ப நாய்கள் மற்றும் 2 கும்கி யானைகள் நிறுத்தப்பட்டும் தப்பித்து வருகிறது. டி23 புலி கடந்த சில வாரங்களில் 12 கால்நடைகளை கொன்றுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 4 பேர் மற்றும் 30-க்கும் மேற்பட்ட கால்நடைகளை இ23 புலி தாக்கி கொன்று உள்ளது.

முதலில் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்து வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்க திட்டமிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here