429

இராமநாதபுரம்

நாடாளுமன்றத் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்த நிலையில் திருவாடானை அருகே இரு வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 2 லட்சத்து 77 ஆயிரம் ரொக்கம் மற்றும் மு க ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் படம் பொறிக்கப்பட்ட டி ஷர்ட் பண்டல்கள் பறிமுதல்

நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் நிலையில் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்தது இதனை அடுத்து தேர்தல் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கருமொழி செக்போஸ்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கோட்டைராஜா தலைமையிலான குழுவினர் காலை முதல் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர் அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த பௌசுல்லா என்பவர் காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.80 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் மற்றொரு காரில் கண்ணன் என்பவர் எடுத்து வந்த மு க ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட 5 டீசர்ட் பண்டில்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர் இதுபோல திணையத்தூர் அருகே தேர்தல் பறக்கும் படை நடத்திய வாகன சோதனையில் பாம்பன் பகுதியைச் சேர்ந்த கோமதி என்பவரது காரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ 97 ஆயிரத்து 100 பணம் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here