புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைக்காக பதிவு செய்துள்ளார். மேலும் 24 வருடமாக அவர் அதனைப் புதுப்பித்து வந்துள்ளார். ஆனால் இதுவரை அவருக்கு வேலை கிடைத்தபாடில்லை.
இதனால் வெறுத்துப்போன இளைஞர் அரசை கேலி செய்யும் விதமாக கட் அவுட் ஒன்றை வைத்துள்ளார். அதில் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெற்றிகரமாக 24 ம் ஆண்டு பதிவு மூப்பு புது பெற்றுவிட்டதாக குறிப்பிட்டு தனது பெயர், பதிவு எண், தொலைபேசி எண் போன்றவற்றை தைரியமாக வெளியிட்டதுடன், பின்குறிப்பில் நலம் விசாரித்து கூட கடிதம் வரவில்லை.
இப்படிக்கு வேலையில்லா இளைஞர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.