
12வது இந்திய சீனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் கடந்த 6ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் கர்நாடக அணியை 3-0 என்ற கோல் கணக்கில் தமிழக அணி வென்று சாதனை.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் தமிழக அணி ஹரியான அணியை எதிர்கொள்கிறது.
22 ஆண்டுகளுக்குப் பின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ள தமிழக சீனியர் ஆண்கள் ஹாக்கி அணிக்கு,தமிழக முதலமைச்சர் சார்பாக சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் அவர்கள் வாழ்த்து💐🙏