Site icon News now Tamilnadu

விராலிமலை அருகே நடந்த விபத்தில் சிக்கிய தொழிலாளிகளை மீட்டு முதலுதவி செய்த முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர்!

விராலிமலை, ஜன-02

விராலிமலையில் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதல் 15 தொழிலாளர்கள் காயம்

டாக்டர் பற்றாக்குறை என்றால் என்ன நானும் ஒரு மருத்துவர் தான் என்று கூறிக்கொண்டு விபத்தில் சிக்கிய தொழிலாளிகளை மீட்டு முதலுதவி செய்த முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர்

விராலிமலை தனியார் தொழிற்சாலை பணி முடிந்து வேன், பேருந்து வாகனங்களில் சென்ற தொழிலாளர்கள் 15 பேர் சாலை விபத்தில் காயமடைந்தனர்

முதலுதவி சிகிச்சை அளித்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர்

விராலிமலையில் வாகன உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் பணி முடிந்து வழக்கம் போல வேன் மற்றும் பேருந்துகளில் விராலிமலை சென்று கொண்டிருந்தனர். திருச்சி -மதுரை தேசிய நெடுஞ்சாலை தேத்தாம்பட்டி பிரிவு அருகே தொழிலாளர்கள் வாகனம் சென்று கொண்டிருந்தது முன்னால் லாரி, கார் சென்றுள்ளது அப்போது நாய் ஒன்று குறுக்கே சென்றதால் கார் ஓட்டுநர் பிரேக் அடித்துள்ளார் இதை எதிர்பார்க்காத லாரி ஓட்டுநர் கார் மீது மேதியுள்ளார் இதை தொடர்ந்து வந்த தனியார் தொழிற்சாலை வேன் லாரி மீது மோத அதன் பின்னால் வந்த பேருந்து வேன் மீது மோதியுள்ளது இதில் வேனில் பயணித்த 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்து விராலிமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

பின்னர் தகவல் அறிந்து விராலிமலை அரசு மருத்துவமனைக்குச் சென்ற முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அங்கு மருத்துவர் இல்லாமல் முதலுதவிக்கு காத்திருந்த நோயாளிகளுக்கு முதலுதவி செய்து ஆறுதல் தெரிவித்தார் இந்த செயலை கண்ட பொதுமக்கள் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரை வெகுவாக பாராட்டினர் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Exit mobile version