Site icon News now Tamilnadu

மெட்டி ஒலி “விஜி” உடல் நலக்குறைவால் காலமானார் .

திருமுருகன் இயக்கி, நடித்த மெட்டி ஒலி சீரியலில் அவருக்கு மனைவியாக விஜி என்கிற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை உமா மகேஷ்வரி.’

ஒரு கதையின் கதை’, ‘மஞ்சள் மகிமை’ போன்ற சீரியல்களிலும், ‘ஈ பார்கவி நிலையம்’ என்கிற மலையாளப் படத்தின் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்.

திருமணம் செய்த பிறகு உமா மகேஸ்வரியை சீரியல்களில் பார்க்க முடியவில்லை. அவர் சென்னை காட்டுப்பாக்கம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் உமா மகேஸ்வரி
உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 40.

கடந்த சில ஆண்டுகளாகவே அவருக்கு உடல்நலக் குறைவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உமா மகேஸ்வரியின் மரணம் குறித்து அறிந்த சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர்.

Exit mobile version