மெத்தனமாக செயல்படும் அரசு அதிகாரிகள்!
செங்கல்சூளை கூலித் தொழிலாளியின் 10 வயது மகள் பிறவியிலிருந்தே வலது கை ஊனமடைந்த மாற்றுத்திறனாளியாக உள்ள நிலையில் மாற்றுத்திறனாளி உதவித்தொகை வழங்க 2023ம் ஆண்டே ஆணை வழங்கியுள்ள நிலையில் இதனால் வரை அந்த உதவி தொகை கிடைக்கவில்லை என வேதனை தெரிவிக்கும் கூலித்தொழிலாளி குடும்பத்தினர் மாற்றுத்திறனாளி உதவித்தொகை கேட்டு சென்றால் அங்கேயும் இங்கேயும் அலைய விடுவதாக குற்றச்சாட்டு!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே தென்னம்பாடி கிராமத்தைச் சேர்ந்த செங்கல்சூளை கூலித் தொழிலாளியான கணேசன் (42) மகாலட்சுமி (38) தம்பதியினருக்கு ஏழு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் இவரது ஐந்தாவது பெண் குழந்தையான அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் திவ்யா ராணி(10)-க்கு பிறவியிலிருந்து வலது கை ஊனமடைந்துள்ள நிலையில் கடந்த 2023ம் ஆண்டு மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கு விண்ணப்பித்து அதே ஆண்டு 10ம் மாதம் மாற்றுத்திறனாளி உதவித்தொகை வழங்க ஆணை பிறப்பித்தும் இதனால் வரை மாற்றுத்திறனாளி உதவித்தொகை கிடைக்கவில்லை என வேதனை தெரிவிக்கும் அந்த குடும்பத்தினர் மாற்றுத்திறனாளி உதவித்தொகை கேட்டுச்சென்றால் அங்கேயும் இங்கேயும் அலைய விடுவதாகவும் அதனால் தங்கள் குழந்தைக்கு ஆணை வழங்கியபடி மாதம் 1500 ரூபாயை மாற்றுத்திறனாளி உதவி தொகையாக வழங்க இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது குழந்தையுடன் சென்ற அந்த தம்பதியினர் மாவட்ட ஆட்சியர் அருணாவை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர். ஏற்கனவே தங்களது குடும்பம் ஏழு பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாகவும் தற்போது குழந்தைக்கு கிடைக்க கூடிய மாற்றுத்திறனாளி உதவித்தொகை கிடைத்தால் தங்களுக்கு உதவியாக இருக்கும் எனவும் அந்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

