Site icon News now Tamilnadu

மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் முன்னாள் இணைத் தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் எம்.பன்னீர்செல்வத்தின் சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை

கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் எம்.பன்னீர்செல்வம் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்தது. அவரது வீட்டில் இருந்து கட்டுக் கட்டாக பணம், கிலோ கணக்கில் தங்க நகைகள், வெள்ளிப் பொருட் கள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துப் பத்திரங்களை காவல் துறையினர் கைப்பற்றியிருந்தனர்.

இந்நிலையில், எம்.பன்னீர்செல்வம் தொடர்புடைய இடங்களில் இருந்து 61 தங்கக் காசுகள், 3.6 கிலோ தங்க நகைகள், 6.4 கிலோ வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது சொத்துகளை முடக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது அமலாக்கத்துறை!

Exit mobile version