Site icon News now Tamilnadu

மதுரை ரியல் ஹீரோ ஹரி

யார் ஹீரோ ? இவரல்லவோ ஹீரோ.
மதுரை சுடுகாட்டில் பன்னிரண்டு வயதில் வேலைக்கு சேர்ந்து தக்க வயதில் முழுநேர பணியாளராக ஆகி இதுவரை சுமாராக இரண்டேமுக்கால் லட்சம் பிணங்களை எரித்தும், புதைத்தும் பெற்ற கூலியில் தனக்கென ஒற்றைப்பைசாவைக்கூட சேர்த்து வைத்துக்கொள்ளாமல்
ஏழை மாணவர்களுக்கும்,ஏதுமற்ற அனாதைகளுக்கும்,வாழ வழியின்றி தவிக்கும் முதியோர்களுக்கும் முழுமனதோடு செலவிட்டு வரும் ஹரி…..இவர்தான்.
பல ஏழைப்பெண்களின் திருமணத்துக்கு தங்கத்தாலி வாங்கித் தந்த வள்ளல் இவர்.
ஒரு தொண்டு நிறுவனம் இவரை அழைத்து கௌரவித்த போதும் உழைத்து களைத்த உடலோடும் துணியோடும் வந்த மனித ஞானி.🙏

Exit mobile version