Site icon News now Tamilnadu

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட மருத்துவர் அணி சார்பில் பெருங்களூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இருதய நோயை அவசர நிலையில் உடனே கண்டறியும் உயர்ரக இசிஜி இயந்திரத்தை வழங்குகின்றனர்..

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட மருத்துவர் அணி சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இருதய நோயை அவசர நிலையில் உடனே கண்டறியும் உயர்ரக இசிஜி (ECG) இயந்திரத்தை வழங்குகின்றனர்..

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 46 வது பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி சார்பில் வடக்கு மாவட்ட மருத்துவர் அமைப்பாளர் டாக்டர் முக முத்துக்கருப்பன் அவர்களின் ஏற்பாட்டில் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருங்களூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இருதய நோயை அவசர நிலையில் உடனே கண்டறியும் உயர் ரக இசிஜி (ECG) இயந்திரத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திமுக புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன் தலைமையில் இன்று வழங்குகிறார்கள்..

அப்பகுதி சுற்றுவட்டாரப் பொதுமக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த இசிஜி இயந்திரத்தின் பயன்பாடு பெரும் பயனுள்ளதாக இருக்கும் என்று அப்பகுதி மக்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புதுக்கோட்டை மாவட்ட திமுக விற்கும் வடக்கு மருத்துவர் அணி நிர்வாகிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்கள்..

Exit mobile version