முதல்வர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சி திட்டம் திடீரென மாற்றம்!
புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம், உன் விளையாட்டு அரங்கம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சேமப்படை மைதானத்தில், நடைபெறுவதாக இருந்தது இதற்கான அனைத்து படிகளும் முடிந்த நிலையில் திடீரென இப்பணிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2/11/26 இன்று காலை 10.30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்கள். அதனைத் தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தினை திறந்து வைக்க உள்ளார்கள்.

